தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு. இவர் உடலை அடக்கம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் 12 வருடமாக ’லட்சுமி’ என்ற பசுவினை வளர்த்து வந்துள்ளார். ராம்பாபுவும், அவரது குடும்பத்தினரும் லட்சுமியை தங்களது குடும்பத்தில் உள்ள ஒருவரை போன்று பாசத்துடன் வளர்த்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்ட லட்சுமிக்கு, ராம்பாபு முறையான சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.