தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய எல்லையில் அமைந்துள்ள துறைமுகங்களில் கொரோனா பரிசோதனை - கொரோனா வைரஸ்

அட்டாரி, கர்த்தர்பூர், அகர்தலா போன்ற துறைமுகங்களில் முழு மருத்துவப் பரிசோதனை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Full medical
Full medical

By

Published : Mar 5, 2020, 11:23 AM IST

சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது மெல்ல மெல்ல பல நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

ஏற்கெனவே மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில் பல விமான நிலையங்களில் பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதுகுறித்த மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அட்டாரி, கர்த்தர்பூர், அகர்தலா போன்ற துறைமுகங்களிலும் முழு மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய வேண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 என்று கூறப்படும் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:‘தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை’ - முதலமைச்சர் பழனிசாமி

ABOUT THE AUTHOR

...view details