கரோனா பரவல் சூழல் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "புதுச்சேரியில் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. நாளை (ஆக. 18) காலை 6 மணி முதல் புதன் கிழமை (ஆக. 19) காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். மக்கள் நடமாட்டத்தைப் பொறுத்து மாற்றம் செய்யப்படும். ஏஎப்டி மில் விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுத்ததால் தான் மில்லை மூடும் நிலைக்கு வந்தோம். துணை நிலை ஆளுநர் கிரண் பேடி மத்திய அரசுக்கு கோப்புகளை அனுப்பி மில்லை மூடக் கோரியுள்ளார்.