தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கவலை வேண்டாம்... பெட்ரோல், டீசல் விலை உயராது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் - வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி

புதிய வேளாண் வரியால் பெட்ரோல், டீசல் விலை உயராது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்துள்ளார்.

Fuel price
Fuel price

By

Published : Feb 2, 2021, 9:21 AM IST

2021-22ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் வேளாண் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி என்ற புதிய வரியை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுதியுள்ளார். அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.2.5, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.4 கூடுதல் வரி வசூலிக்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து பெட்ரோல், டீசல் விற்பனை விலை அதிகரித்து பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும் என அச்சம் நிலவிவருகிறது. இதற்கு விளக்கும் அளிக்கும்விதமாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசுகையில், புதிய வரியால் பெட்ரோல், டீசல் விலை உயராது.

தங்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என மக்கள் கவலைகொள்ளத் தேவையில்லை. அரசு எக்சைஸ் வரியை குறைத்துவிட்டுத்தான் இந்தப் புதிய வரியை அறிமுகம் செய்துள்ளது என விளக்கியுள்ளார். மோடி அரசின் நிதிநிலை அறிக்கை நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லும் என அவர் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க:பட்ஜெட் 2021-22: தூய்மை இந்தியா 2.0 திட்டத்திற்கு ரூ.1.41 லட்சம் கோடி ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details