இதனைக் கருத்தில்கொண்டு புனே மாநகராட்சி, பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருளை உருவாக்கும் ஒரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. இதுபோன்ற எரிபொருளை உருவாக்க புனே மாநகராட்சி பல ஆலைகளை கட்டியுள்ளது, அவற்றில் சில செயல்படவும் தொடங்கிவிட்டன.
தனியார் நிறுவனங்களுடன் இனைந்து புனே நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து எரிபொருளை தயாரிக்கின்றது. இந்த முறையில் மிகுதியாகும் கழிவுகளை கொண்டு சாலைகளும் அமைக்கப்படுகின்றன. ஜெதுரி, நாராயன்பேட் என்று புனேவில் இரு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த திட்டத்தின் மூலம், பல்வேறு நகராட்சியிலிருந்து சேகரிக்கப்பட்டும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த முடிகிறது.