தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மழையை நிறுத்த தவளைக்கு டைவர்ஸ்... விநோத சம்பவம்! - married frogs divroced for stop rain

மத்திய பிரதேசம்: போபாலில் பெய்து வரும் கனமழையை தடுப்பதற்கு மகாதேவ் கோயிலில் தவளைக்கு விவகாரத்து செய்த விநோத சம்பவம் நடந்துள்ளது

மழையை நிறுத்த தவளைக்கு டைவர்ஸ்

By

Published : Sep 12, 2019, 11:18 PM IST

மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட வறட்சிக் காரணமாக மழை வேண்டிக் கடந்த ஜூலை 19ஆம் தேதி போபால் மக்கள் சார்பில் தவளைக்கும் தவளைக்கும் திருமணம் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தினாலேயே மாநிலத்திலும், தலைநகரிலும் நல்ல மழை பெய்துவருகிறது என மக்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதால், மக்கள் தண்ணீரில் சிக்கித் தவித்து வந்தனர்.

மழையை நிறுத்த தவளைக்கு டைவர்ஸ்

இந்நிலையில், மழை நிற்கவேண்டும் என ஓம் சிவசக்தி சேவா மண்டல அமைப்பினர் இந்திரபுரியில் உள்ள மகாதேவ் கோயிலில் திருமணம் நடைபெற்ற தவளைகளுக்கு விவகாரத்து செய்துவைத்தனர். இந்த தவளைகளைப் பிரிக்கும் சடங்கு முழு சட்ட நடைமுறைகளுடன் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details