ஈரான் வழியாக பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து உளவு பார்த்ததாக இந்திய கப்பல் படை வீரர் குல்பூஷன் ஜாதவிற்கு, பாகிஸ்தான் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் குல்பூஷன் ஜாதவ் குடும்பத்தினரும், நண்பர்களும் பிராத்தனையில் ஈடுபட்டனர்.