புதுச்சேரியில் வில்லியனூர் அடுத்த உறுவையாறுபேட் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் (35). குடிப்பழக்கம் காரணமாக இவர் குடும்பத்திலிருந்து பிரிந்து வாழ்ந்துவந்தார்.
இவரது தாயார் தினமும் உணவு வைத்துவிட்டுச் செல்வது வழக்கம். அவ்வாறு உணவு வைக்க வரும்போது வீட்டில் துர்நாற்றம் வீசியுள்ளது. உடனடியாக தாயார் மங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பார்த்தபோது வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பின்னர் அவரது சடலம் உடற்கூறு ஆய்விற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் அவர் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது.