தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்திருப்பது மனிதாபிமானமற்ற செயல்' - காங்கிரஸ் விமர்சனம் - காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி: ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், இது மனிதாபிமானமற்ற செயல் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

Cong
Cong

By

Published : Apr 24, 2020, 9:38 PM IST

கரோனா வைரஸ் நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை, மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதனை மனிதாபிமானமற்ற செயல் என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கலந்து கொண்டார். அவர் கூறுகையில், "புல்லட் ரயில் திட்டத்தை நிறுத்தாமல், கரோனாவுக்கு எதிரான போரில் மக்களுக்கு சேவை செய்துவரும் ராணுவ வீரர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காத மனிதாபிமானமற்ற செயல். இம்மாதிரியான சூழலில் மக்களுக்கு நிதியுதவி வழங்கி, உதவி செய்யாமல், அவர்களை மத்திய அரசு சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ராணுவத்தில் மூன்று பயிற்சி கைவினைஞர்களுக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details