தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா சோதனைக்கு வந்தால் 5 கிலோ அரிசி இலவசம்! - அதிமுக

புதுச்சேரி: கரோனா பரிசோதனைக்கு வரும் மக்களின் வருகை குறைந்துள்ளதால், அவர்களை ஊக்குவிக்க 5 கிலோ இலவச அரிசி வழங்கி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

mla
mla

By

Published : Sep 14, 2020, 5:11 PM IST

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கரோனா பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால், முன்பைவிட சோதனை செய்து கொள்ள மக்கள் ஆர்வம் செலுத்தாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில், உப்பளம் தொகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று நடைபெற்ற பரிசோதனை முகாமை, தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.

அப்போது, கரோனா கண்டறிதல் சோதனைக்கு மக்களின் வருகை குறைந்து வருவதால், அவர்களை வரவைக்க ஊக்குவிக்கும் வகையில், சோதனை செய்து கொள்ள வரும் மக்கள் அனைவருக்கும் 5 கிலோ இலவச அரிசியை சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் வழங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் வந்திருந்து கரோனா சோதனை மேற்கொண்டதுடன், 5 கிலோ இலவச அரிசி பெற்றுச்சென்றனர்.

கரோனா சோதனைக்கு வந்தால் 5 கிலோ இலவச அரிசி

இதையும் படிங்க:'நாட்டின் 5 மாநிலங்களே 60% கரோனா பாதிப்பை எதிர்கொள்கின்றன'

ABOUT THE AUTHOR

...view details