தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்று தொடங்கிய இலவச முழு நேர நீட் பயிற்சி வகுப்புகள்!

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச முழு நேர நீட் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கின.

இலவச முழு நேர நீட் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கின!

By

Published : Mar 25, 2019, 10:59 AM IST

மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து அதற்கான பயிற்சி வகுப்புகளை அரசு தொடர்ந்து நடத்திவருகின்றது. அதன்படி, 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்தப்பயிற்சி வகுப்புகளிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட ஒன்பதுஆயிரத்து 800 மாணவர்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ள பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர்.சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரில் தொடங்கப்பட்டுள்ள இப்பயிற்சி வகுப்பு மே 3ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபுணர்கள், ஆற்றல் மிக்க ஆசிரியர்கள் உள்ளிட்டோர்களைக்கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், இப்பயிற்சிக்கு தேர்வாகாத மாணவர்களுக்கு விசாட் தொழில்நுட்பத்தின் மூலம், 412 மையங்களில் நீட் பயிற்சி காணொளி காட்சி வாயிலாக வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details