தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

2.25% குடிபெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமே இலவச ரேஷன் விநியோகம் - அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

டெல்லி: நாடு முழுவதும் சுமார் எட்டு கோடி குடிபெயர் தொழிலாளர்கள் உள்ள நிலையில் 2.25 லட்சம் பேருக்கு மட்டுமே இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

Migrants
Migrants

By

Published : Jun 8, 2020, 5:40 PM IST

கரோனா ஊரடங்கு அறிவிப்புக்குப்பின் நாடு முழுவதும் உள்ள குடிபெயர் தொழிலாளர்கள் வேலையின்மை காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்லும் சூழல் உருவானது. லட்சக்கணக்கான குடிபெயர் தொழிலாளர்கள், உரிய உணவு உறைவிடமின்றி தங்கள் சொந்த ஊருக்கு கால்நடையாகவே திரும்பச் செல்லும் அவலநிலை உருவானது.

இவர்களில் பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியதையடுத்து, இவர்களுக்கு தலா ஐந்து கிலோ இலவச அரசி, கோதுமை உள்ளிட்டவை விநியோகம் செய்யப்படும் என அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், குடிபெயர் தொழிலாளர்களுக்கு இலவச பொது விநியோகம் குறித்து அரசு புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புள்ளிவிவரத்தில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் எட்டு கோடிக்கும் மேற்பட்ட குடிபெயர் தொழிலாளர்கள் உள்ள நிலையில், தற்போதுவரை 20.36 லட்சம் பேருக்கு மட்டும்தான் இலவச தானியங்கள் வழங்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

அதன்படி, இதுவரை 20.26 லட்சம் பயனாளர்களுக்கு சுமார் 10 ஆயிரத்து 131 டன் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, சுமார் 4.42 லட்சம் டன் தானிய இருப்பு மாநில, யூனியன் பிரதேசங்களிடம் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தேவைக்கான உணவு தானியம் கையில் உள்ளபோதும் அதை முறைப்படி விநியோகம் செய்வதில் பெரும் பங்கு உள்ளது இந்த புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:பயிற்சியின்போது நிகழ்ந்த பரிதாபம்: ஒடிசாவில் தமிழ் பெண் விமானி பலி

ABOUT THE AUTHOR

...view details