தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா தடுப்பூசி குறித்த பாஜகவின் வாக்குறுதி தேர்தல் விதிமீறல் அல்ல - தேர்தல் ஆணையம் - கரோனா தடுப்பூசி

டெல்லி: தேர்தல் வாக்குறுதியில் கரோனா தடுப்பூசிகளை இலவசமாக அளிப்போம் என பாஜக தெரிவித்திருப்பது தேர்தல் விதிமீறல் அல்ல என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Covid vaccine
Covid vaccine

By

Published : Oct 31, 2020, 6:26 PM IST

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதற்கிடையே, பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அக்கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.

இதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. நாட்டையே உலுக்கி போட்டுள்ள கரோனா போன்ற பெருந்தொற்றுக்கான தடுப்பூசிகளை வாக்குறுதியாக அளித்திருப்பது தேர்தல் விதிமீறல் எனப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

தேர்தல் ஆணையத்தில் அளித்த புகாரில், பாஜகவின் வாக்குறுதி தேர்தல் விதிமீறல் என சமூக ஆர்வலரான சாகேத் கோகலே தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், "தேர்தல் வாக்குறுதிகளுக்கு என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், கரோனா தடுப்பூசி குறித்த பாஜகவின் வாக்குறுதி தேர்தல் விதிமீறல் அல்ல.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்கள் நலத் திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details