தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரு பைசா செலவில்லாமல் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை - டெல்லியில் பெண்களுக்கு இலவச பஸ் சேவை

டெல்லி: இன்று முதல் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.

ஒரு பைசா செலவில்லாமல் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை

By

Published : Oct 29, 2019, 3:16 PM IST

டெல்லியில் கடந்த ஜூன் 3ஆம் தேதி பெண்கள் பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் இலவசமாக பயணிப்பதற்கான திட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று முதல் டெல்லியில் உள்ள டெல்லி டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் (DTC) பேருந்துகள், கிளஸ்டர் பேருந்துகளில் பெண்கள் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்துத் துறைக்கு ரூ.479 கோடி கூடுதல் மானியம் வழங்க டெல்லி சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பேருந்துகளில் பணியமர்த்தப்படும் பெண் காவலர்களின் (மார்ஷல்கள்) எண்ணிக்கை 13 ஆயிரமாக உயர்த்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பெண்களின் பாதுகாப்பு கருதி அறிவிக்கப்பட்டுள்ள இதுபோன்ற திட்டங்களுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையும் படியுங்க:

பெண் பயணிகளின் பாதுகாப்பிற்கான பெண் காவலர்களின் எண்ணிக்கை 13,000 ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details