தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சந்திரயான் 2 - அடுத்தடுத்து வெற்றி! - orbit raising maneuver

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை நான்காவது முறையாக வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டது.

சந்திரயான் 2

By

Published : Aug 3, 2019, 1:50 PM IST

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ஜூலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இது நேரடியாகப் புவி ஈர்ப்பை எதிர்த்துச் செல்லாமல், புவி வட்ட சுற்றுப் பாதையிலேயே வலம்வந்த பின்னர் நிலவுக்குச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது பூமியைச் சுற்றிவரும் சந்திரயான் 2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை நான்காவது முறையாக நேற்று (ஆகஸ்ட் 2) பிற்பகல் சரியாக 3.27 மணிக்கு அதிகரிக்கப்பட்டது. இதேபோல ஐந்தாவது, இறுதிகட்ட சுற்று வட்டப்பாதை அதிகரிப்பு வரும் ஆகஸ்ட் 6 மதியம் 2.30 - 3.30 மணிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இஸ்ரோ ட்வீட்

முன்னதாக முதல் சுற்று வட்டப்பாதை அதிகரிப்பு ஜூலை 24ஆம் தேதி, இரண்டாம் சுற்று வட்டப்பாதை அதிகரிப்பு ஜூலை 26ஆம் தேதி, மூன்றாம் சுற்று வட்டப்பாதை அதிகரிப்பு ஜூலை 29ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. ஐந்தாம்கட்ட சுற்றுப் வட்டப்பாதை அதிகரிப்புக்குப் பின் சந்திரயான் 2 நிலவை நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கும். எந்தவொரு விண்கலமும் தரையிறங்காத தென் துருவத்தில் சந்திரயான் 2 தரையிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 2 பற்றி விரிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்...

தடைகளை தகர்த்த இஸ்ரோவின் பாகுபலி: சந்திரயான் 2.0

ABOUT THE AUTHOR

...view details