கேரள மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியை சேர்ந்த நான்கு வயது சிறுமி ஓணம் விடுமுறைக்காக உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது உறவினர் ஹாரிஸ் ஆபிரகாம்(45) என்பவர் விளையாடி கொண்டிருந்த சிறுமியை அழைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
பின்னர் சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டுள்ளதை அறிந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.