தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிலக்கரி சுரங்க விபத்து: தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழப்பு! - நான்கு தொழிலாளர்கள் பலி

ஹைதராபாத்: அரசுக்குச் சொந்தமான சிங்காரேனி கொலிரீஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நடந்த வெடிவிபத்தில் தொழிலாளர்கள் நால்வர் உயிரிழந்தனர்.

four-workers-killed-in-explosion-at-sccl-mine-in-telangana
four-workers-killed-in-explosion-at-sccl-mine-in-telangana

By

Published : Jun 2, 2020, 7:49 PM IST

தெலங்கானாவின் பெடப்பள்ளி மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமாக சிங்காரேனி கொலிரீஸ் கம்பெனி லிமிடெட் என்று நிலக்கரி சுரங்கம் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தனியார் ஒப்பந்தக்காரரால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தில் பெரிய கற்பாறைகளை உடைக்க டெட்டனேட்டர்களைப் பயன்படுத்தி வேலை செய்துவந்தனர்.

அப்போது திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் நான்கு பேர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று பேர் அதீத காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details