மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் டாங்கிரி பகுதியில் உள்ள தாந்தல் தெருவில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த கட்டடம் இன்று காலை 11 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்து குறித்து அறிந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர இரண்டு வயது குழந்தை உட்பட ஐந்து பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாடி கட்டடம் இடிந்து விபத்து - 2 பேர் பலி, மீட்பு பணிகள் தீவிரம்!
மும்பை: டாங்கிரி பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
building collapse
மேலும், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பதற்கான தற்காலிக மையமும் துவங்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் பல கட்டடங்கள் முறையான பராமரிப்பின்றி இருப்பதாகவும், இந்த விபத்துக்கு காரணம் மகாராஷ்டிரா வீட்டுவசதி வாரியத்தின் அலட்சியமே என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Last Updated : Jul 16, 2019, 1:43 PM IST