தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 27ஆம் தேதி திஷா நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்கள் இருவர், கிளீனர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் உள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரணை செய்துவந்த காவல்துறையினர், குற்ற நிகழ்விடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையின்போது அவர்கள் நான்கு பேரும் தப்பியோட முயற்சித்தனர். அவர்களைத் தடுக்கும் முயற்சியில் கால்துறையினர் ஈடுபட்டு துப்பாக்கி முனையில் தடுத்தனர். அதையும் மீறி தப்பியோடிய அவர்கள் நான்கு பேரையும் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.