தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் 24 மணி நேரத்தில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! - 24 மணி நேரத்தில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இருவேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Kashmir issue
Kashmir issue

By

Published : Jun 22, 2020, 7:12 AM IST

ஜம்மு காஷ்மீர் யூனியன், ஸ்ரீநகரில் உள்ள ஜதிபால் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு உளவுத்தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின்பேரில், அப்பகுதியை துணை ராணுவப்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதேபோல் ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவரிடமிருந்து, ஏகே 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இண்டெர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனில் (ஆளில்லா குட்டி விமானம்) இருந்தும், இதே ரக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: சீனப் பொருள்களின் பட்டியலைக் கோரும் மத்திய அரசு!

ABOUT THE AUTHOR

...view details