தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நான்கு கால், மூன்று கைகளுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை! - ராஜஸ்தான் மருத்துவர்கள் ஆச்சரியம்

ராஜஸ்தான்: மம் ராஜு எனும் பெண் நான்கு கால்களுடனும் மூன்று கைகளுடனும் கூடிய அதிசய பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிசய பெண் குழந்தை

By

Published : Sep 25, 2019, 12:57 PM IST

ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் பாதுலால் குர்ஜூர் (badhulal gurjar ), மம் ராஜு எனும் இளம் தம்பதியினர். கூலி வேலை செய்து வரும் இவர்கள் தங்களுடைய முதல் குழந்தைக்காக காத்திருந்தனர். இந்நிலையில் மம் ராஜு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். அந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தையும் , பெண் குழந்தையும் உள்ளனர்.

அந்த ஆண் குழந்தை ஆரோக்கியமாக உள்ள நிலையில் பெண் குழந்தை மட்டும் நான்கு கால்களுடனும் மூன்று கைகளுடனும் பிறந்துள்ளது. இதை கண்டு வியப்படைந்த மருத்துவர்கள் அந்த குழந்தையின் உபரி கைகளையும் கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்துள்ளனர்.

மேலும் பெண் குழந்தைக்கு மூச்சு விடுவதில் கொஞ்சம் பிரச்னை உள்ளதால், அக்குழந்தைக்கு பிராணவாயு (ஆக்சிஜன்) கொடுக்கப்பட்டுள்ளது. போதிய படிப்பறிவைப் பெறாத இந்த தம்பதியினர் இதுவரை ஸ்கேன் செய்து பார்த்ததும் இல்லை எனத்தெரிய வருகிறது. மேலும் கர்ப்பத்தில் இருப்பது இரட்டைக் குழந்தைகள் என்றும் அவர்களுக்கு தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details