ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்திலுள்ள சிக்கன்வாஸ் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கட்டட வேலை நடந்துவருகிறது.
இங்கு கட்டட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்தக் கட்டடம் நேற்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது.
இதில் கட்டட தொழிலாளர்கள் ஹரி பிரசாத் (34), அவரின் மனைவி சோனியா (28) மகன் சின்து (5) மற்றொரு தொழிலாளி லட்சுமி தேவி (50) ஆகியோர் உயிரிழந்தனர்.