தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிவேகமாக வந்த கார் மோதி நடைபாதையில் இருந்த 4 பேர் பலி! - கார் விபத்தில் 4 பேர் பலி

மும்பை: அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.

four-killed-as-speeding-car-hits-footpath-in-mumbai
four-killed-as-speeding-car-hits-footpath-in-mumbai

By

Published : Sep 1, 2020, 9:38 PM IST

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையிலுள்ள கிராபோர்டு மார்க்கெட் பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்கு அருகே உள்ள நடைபாதையில் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த பலர் அரசு கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ஜெ.ஜெ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் காரில் பயணித்தவர்களா அல்லது உணவக நடைபாதையில் அமர்ந்திருந்தவர்களா என்பது சரியாக கண்டறிய முடியவில்லை என காவல் துறையினர் தெரிவித்தனர்.

விபத்து குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details