சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர்ட் மாவட்டத்தில் உள்ள பத்ராலப்லி எனும் கிராமத்தில் ஜிந்தா ஸ்டீல் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று (10-06-2020) மாலை இந்த ஆலையின் டீசல் சேமிப்புக் கிடங்கு வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கரில் ஸ்டீல் ஆலையில் வெடி விபத்து! - பத்ராலப்லி கிராமத்தில் ஜிந்தா ஸ்டீல் ஆலையில் விபத்து
சத்தீஸ்கர் : ராய்கர்ட் மாவட்டத்தில் உள்ள ஸ்டீல் ஆலையின் டீசல் சேமிப்புக் கிடங்கு வெடித்து சிதறியதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
ஆலையில் உள்ள குப்பைக் கிடங்கில், கேஸ் கட்டர் மூலம் நான்கு ஊழியர்கள் பழைய டீசல் சேமிக்கும் இடத்தை அறுத்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தீப்பற்றி, டீசல் சேமிக்கும் இடம் வெடித்து, இந்தத் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் நான்கு ஊழியர்களுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.