தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரேநாளில் பிறந்த 4 குழந்தைகள் உயிரிழப்பு! - Uttar Pradesh PHC in one night

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரேநாளில் பிறந்த நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

four-infants-die-during-birth-at-uttar-pradesh-phc-in-one-night
four-infants-die-during-birth-at-uttar-pradesh-phc-in-one-night

By

Published : Jun 2, 2020, 4:22 PM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தின் படான் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில் நேற்று இரவு கிர்தார்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்து சில மணி நேரங்களில் உயிரிழந்தது.

இதனைத்தொடர்ந்து அலிநகர் பகுதியைச் சேர்ந்த அனிதாவுக்கு பெண்ணிற்கு ஆண் குழந்தைப் பிறந்து சில மணி நேரங்களில் உயிரிழந்தது.

பிறந்த குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர்

இதேபோல் பல்பூர் கிராமத்தைச் சேர்ந்த குஷும் என்ற பெண்ணிற்கும், சகாமாய் கிராமத்தைச் சேர்ந்த மாலா என்ற பெண்ணிற்கும் ஆண் குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தன.

இவர்கள் நான்கு பேரிடமும் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவக் கட்டணமாக ரூ.400 முதல் ரூ.1500 வரை வாங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மருத்துவமனையில் மருந்துகள் கொடுக்காமல், வெளியிலிருந்து மருந்துகள் வாங்குவதற்கு உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

பிறந்த குழந்தையைப் பறிகொடுத்த பெற்றோர்

ஒரேநாளில் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்த சில மணி நேரங்களிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து உறவினர்கள் பேசுகையில், ''ஆரம்ப சுகாதார மையத்தில் குழந்தைபேறுக்கு ஓய்வுபெற்ற செவிலி ஒருவரே இன்னும் மருத்துவம் பார்த்துவருகிறார்.

இந்த சுகாதார மையத்தில் குழந்தைகள் இறப்பு விழுக்காடு அதிகமாகவுள்ளது. ஆனால் குறைத்தே அரசுக்கு தகவல் கொடுக்கின்றனர். நேற்று நான்கு குழந்தைகள் உயிரிழந்தும் மருத்துவ அலுவலர்கள் யாரும் இங்கு வரவில்லை'' என்றனர்.

இது குறித்து மருத்துவ அலுவலர்கள் பேசுகையில், ''இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்'' எனத் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details