மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஆத்மரம் பண்டர்கர் என்பவர் தனக்குச் சொந்தமான பகுதியில் புதிதாகக் கிணறு ஒன்றை அமைத்துள்ளார். நீரைச் சுத்தப்படுத்த பிளீச்சிங் பவுடரை புதன்கிழமை இரவு அக்கிணற்றில் போட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் விஷவாயு தாக்கி தந்தை - மகன் உள்பட நால்வர் உயிரிழப்பு! - விஷ வாயு தாக்கி நால்வர் உயிரிழப்பு
13:11 July 02
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கிணற்றில் இறங்கிய தந்தை, மகன் உட்பட நான்கு பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று காலை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மோட்டர் பம்பை அகற்ற ஆத்மரம் பண்டர்கரின் மகன் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். நீண்ட நேரமாக எவ்வித அசைவும் தெரியாததால், மகனைக் காப்பற்ற ஆத்மரம் பண்டர்கரும் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். அப்போது அவரும் விஷவாயுவால் அவரும் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து கிணற்றில் இறங்கிய அக்கம்பக்கத்தினர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காலை 9 மணிக்கு நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் உயிரிழந்த நால்வரின் உடல்களையும் மீட்டனர்.
புதன்கிழமை இரவு ஆத்மரம் பண்டர்கர் கிணற்று நீரைச் சுத்தப்படுத்த போட்ட கெமிக்கலிருந்து வெளிப்பட்ட விஷவாயு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு, நால்வரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஆத்மரம் பண்டர்கர், அவரது மகன் ஜானக்லால் ஆத்மரம் பண்டர்கர் (36), அருகில் வசிக்கும் ராஜு பயலால் பண்டர்கர் (35), தன்ராஜ் லக்ஷ்மன் கைதானி (40) ஆகியோர் உயிரிழந்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனையை அதிகரிக்க மத்திய அரசு வலியுறுத்தல்!