கடந்த ஐந்து நாள்களாக உடல்நலக்குறைவால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான எச்.ஆர். பரத்வாஜ் உயிரிழந்தார். அவருக்கு வயது 83. டெல்லியில் உள்ள மாக்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் மரணம் - முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் மரணம்

21:51 March 08
டெல்லி: முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான எச்.ஆர். பரத்வாஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரின் மகன் அருண் பரத்வாஜ் கூறுகையில், " நிகம்போத் காட்டில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு அவரின் உடல் தகனம் செய்யப்படும்" என்றார்.
1982ஆம் ஆண்டு முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், மத்திய சட்டத்துறை இணையமைச்சராக ஐந்தாண்டுகள் பதவிவகித்தார்.பல முக்கிய பொறுப்புகளை வகித்துவந்த பரத்வாஜ், மத்திய சட்டத்துறை அமைச்சராக 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை இருந்தார். 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை கர்நாடகாவின் ஆளுநராகவும் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: தெலங்கானா ஆணவ கொலை: குற்றம்சாட்டப்பட்ட மாமனார் தற்கொலை
TAGGED:
Hans Raj Bhardwaj died