கன்னியாகுமரி மக்களவை உறுப்பினரும், தொழிலதிபருமான வசந்தகுமார் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்றுவந்த நிலையில், நேற்று (ஆக. 28) மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
சகோதரனின் இறப்பு: அதிர்ச்சியில் மயங்கிய குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி! - கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார்
02:14 August 29
ஹைதராபாத்: தனது இளைய சகோதரனும், எம்.பி.யுமான வசந்தகுமாரின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் மயங்கிவிழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இவரது இறப்புச் செய்தி அவரது மூத்த சகோதரரும் காங்கிரசின் மூத்தத் தலைவருமான குமரி அனந்தனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனைக் கேட்ட அதிர்ச்சியில் குமரி அனந்தன் மயங்கிவிழுந்தார். இதையடுத்து, உடனடியாக அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவரது மகள் தமிழிசை தற்போது தெலங்கானாவின் ஆளுநராக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.