புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் நமச்சிவாயம். இவர் தனது வில்லியனுர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தார். நமச்சிவாயத்திற்கு ஆதரவாக ஊசுடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தீப்பாஞ்சானும் ராஜினாமா செய்தார்.
பதவிகளை ராஜினாமா செய்த நமச்சிவாயம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜன.26) புதுச்சேரியில் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ராஜினாமா செய்த நமச்சிவாயம் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி புறப்பட்டார்.