முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 28 ஆண்டுகளாக அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் வசித்து வந்தார். தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் குடியேறவுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு குடிபெயர்கிறார் 'மன்மோகன் சிங்' - Dr. Manmohan Singh
கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தற்போது ராஜஸ்தானில் குடியேற உள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஐந்து முறை ராஜ்ய சபா எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவரது ராஜ்யசபா உறுப்பினர் பதவிக் காலம் முடிவடைந்தது.
அதன்பின், பாஜக மூத்த தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான மதன் லால் ஷைனி ஜூன் 24ஆம் தேதியன்று உயிரிழந்தார். இதனால் ராஜ்ய சபாவில் ஒரு இடம் காலியானது. தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, காங்கிரஸ் கட்சியின் ராஜ்ய சபா வேட்பாளராக மன்மோகன் சிங்கை களமிறக்க மேலிடம் முடிவு செய்திருப்பதால்தான், அவர் கடந்த 28 ஆண்டுகளாக வசித்து வந்த கவுகாத்தியிலிருந்து, ராஜஸ்தானில் குடியேறவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.