தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை - ராணுவ மருத்துவமனை!

டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Former president Pranab Mukherjee remains on ventilator
Former president Pranab Mukherjee remains on ventilator

By

Published : Aug 15, 2020, 3:01 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு (84) ஆகஸ்ட் 10ஆம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பிரணாப் முகர்ஜிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராணுவ மருத்துவமனை நிர்வாகம், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அதனால் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க...'பிரணாப்பின் உடல்நிலை மோசமடையவில்லை'

ABOUT THE AUTHOR

...view details