17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், பிகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதல் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி, இந்நாள் துணை ஜனாதிபதி வாக்களித்தனர்! - VENKAIAH NAIDU
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, இந்நாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
பிரணாப் முகர்ஜி
அதன் ஒரு பகுதியாக, கே.காம்ராஜ் சாலையில் உள்ள என்.பி. பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தன் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்தார். நிர்மல் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது மனைவியுடன் வாக்கிளித்தார்.