உலக மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தைப் பயன்படுத்தி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இதற்காக பிரதமர் மோடி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முன்னாள் பிரதமர் கோரிக்கை - மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முன்னாள் பிரதமர் கோரிக்கை
பெங்களூரு: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முன்னாள் பிரதமர் தேவகவுடா கோரிக்கை விடுத்துள்ளார்.
Gowda
1996ஆம் ஆண்டு, நான் பிரதமராக இருந்தபோது இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தேன். சமூக, அரசியல், பொருளாதார தளத்தில் பெண்கள் மேம்பட்டால்தான் நாடு வளர்ச்சியடையும். உள்ளாட்சி அமைப்புகள், அரசு வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நான் வழிவகை செய்தேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மோடியின் ட்விட்டரில் சென்னை பெண்!