முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து பாஜக வேட்பாளரை நிறுத்தாததால், மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள மன்மோகன் சிங்குக்கு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினரான முன்னாள் பிரதமர்! - மன்மோகன் சிங்
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
Manmohan singh
86 வயதான மன்மோகன் சிங், முன்னதாக அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார். மக்களவைக்கு ஒருமுறை கூட தேர்வாகாத மன்மோகன் சிங் மாநிலங்களவைக்கு ஆறாவது முறையாக தேர்வாகியுள்ளார்.
Last Updated : Aug 24, 2019, 12:43 AM IST