92 வயதான ஒடிசா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் பகாபத் பிரசாத் மோகந்தி சனிக்கிழமை(டிசம்பர் 8) இரவு அங்குள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர் ஒடிசா மாநிலத்தின் கேந்திரப்பாரா சட்டபேரவைத் தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றவர்.
1971ஆம் ஆண்டு பிரஜா சோசலிஸ்ட் கட்சியிலிருந்தும் 1985 மற்றும் 1995ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும், இவர் மாநில உயர் கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பகாபத் பிரசாத் மோகந்தின் உடல் முன்னாள் அமைச்சரின் இந்த மறைவுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது இரங்கலைத் தெரிவித்தார். மோகந்தி மறைவு குறித்து அவர் கூறுகையில், " அவர் ஒரு திறமையான நிர்வாகி. அதுமட்டுமல்ல தேர்ந்த ஒரு அரசியல்வாதி" என்று கூறியுள்ளார். மேலும், அவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டெல்லி தீ விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு - மோடி அறிவிப்பு