தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மயானத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, முன்னாள் எம்எல்ஏ கட்டடம் இடிப்பு! - உத்திரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்

லக்னோ: மயானத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டிய உத்தரப் பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் கட்டடம் இடிக்கப்பட்டது.

மாயானத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, முன்னாள் எம்எல்ஏ கட்டடம் இடிப்பு!
மாயானத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, முன்னாள் எம்எல்ஏ கட்டடம் இடிப்பு!

By

Published : Jul 9, 2020, 1:41 AM IST

உத்தரப் பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம்சேவாக் சிங் படேலின் கட்டடம், படான் மாநகராட்சி அலுவலர்கள் முன் நேற்று முன்தினம்(ஜூலை 7) இடிக்கப்பட்டது.

இந்தக் கட்டடம் மயான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதையடுத்து இடிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து படான் மாவட்ட மாஜிஸ்திரேட் (நீதித்துரை நடுவர்) குமார் பிரசாந்த் கூறுகையில், 1989 ஆம் ஆண்டு, உள்ளூர் வருவாய் அலுவலர் உதவியுடன் சட்டவிரோதமாக மயான இடத்தை தனது பெயருக்கு படேல் மாற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கட்டடத்தை இடிக்க நீதிமன்றத்தின் உத்தரவு வாங்கினோம். பின்னர், கட்டடத்தை இடிப்பது குறித்து படேலுக்கு மூன்று முறை அறிக்கை அனுப்பினோம். இதனையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட ஐந்தாயிரம் சதுரஅடி நிலத்தில் கட்டடப்பட்ட கட்டடத்தை இடித்தோம்” என்றார்.

இது குறித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம்சேவாக் சிங் படேல் கூறுகையில், அரசியல் அழுத்ததின் காரணமாக மாநகராட்சி அலுவலர்கள் கட்டடம் இடித்துள்ளனர் எனக் குற்றஞ்சாட்டினார்.

தற்போது ராம்சேவாக் சிங் படேல் பாஜகவில் உள்ளார். முன்னதாக சாமஜ்வாடி கட்சியிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...இது பசு வதையல்ல... பசு வன்புணர்வு! சிக்கிய நபர்

ABOUT THE AUTHOR

...view details