தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜேஎன்யு விவகாரம்: தீபிகாவை சாடிய முன்னாள் மத்திய அமைச்சர்

டெல்லி: ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாக நிற்பது போன்று காட்டிக்கொண்டு தீபிகா தனது படத்திற்கான விளம்பரத்தைத் தேடியிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந் தியோரா சாடியுள்ளார்.

Milind Deora
Milind Deora

By

Published : Jan 8, 2020, 8:14 AM IST

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவைத் தெரிவித்துவருகின்றனர். பாலிவுட் பிரபலங்களான அனுராக் காஷ்யாப், விஷால் பரத்வாஜ், சோயா அக்தர், டாப்சி, ரிச்சா சத்தா, அனுபவ் சின்ஹா உள்ளிட்ட பலரும் மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று ஜேஎன்யு வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு நடிகை தீபிகா படுகோன் தனது ஆதரவை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் மத்திய இணை அமைச்சர் மிலிந் தியோரா தீபிகா மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், 'ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொள்வதாகக் காட்டிக்கொண்டு உங்களது படத்தின் விளம்பரத்தைத் தேடிக்கொண்டிருப்பீர்களானால் இதைவிட மோசமான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இதனால் அவர் இழக்க நிறைய உள்ளது. இந்தக் காலத்தில் ஒரு கலைஞராக இருப்பது கடினம். நீங்கள் செய்தாலும் பாதிப்பு, செய்யாவிட்டாலும் பாதிப்பு உங்களுக்கே' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் பதிவை இணையவாசிகள் பலரும் விமர்சித்துவருவதோடு, தீபிகாவுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

தீபிகா படுகோன் நடிப்பில் வரும் 10ஆம் தேதி சப்பாக் திரைப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விளம்பரப் பணிகளில் கடந்த சில வாரங்களாக அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதும் நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க...

ஜேஎன்யு தாக்குதல்: போராட்ட மாணவர்களுடன் இணைந்த 'சப்பாக்' தீபிகா படுகோனே!

ABOUT THE AUTHOR

...view details