கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கரோனா - சித்தராமையாவுக்கு கரோனா
08:19 August 04
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "எனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கரோனா