தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது உபா சட்டம் பாய்ந்தது!

டெல்லி : ஜாமியா பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தியதற்காக ஜேஎன்யு முன்னாள் மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது ‘உபா’ சட்டம் (சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்) பாய்ந்தது.

Former JNU student Sharjeel Imam charged under UAPA
ஜே.என்.யூ மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது உபா சட்டம் பாய்ந்தது!

By

Published : Apr 30, 2020, 11:16 AM IST

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் 2019 டிசம்பர் 13ஆம் தேதி நிகழ்ந்த கலவரத்திற்கு மாணவர் ஷர்ஜீல் இமாம் நிகழ்த்திய உரைதான் காரணம் என்று டெல்லி காவல் துறையால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதனையடுத்து ஸ்ரீ ராஜேஷ் தியோ தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், ​​சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ஷர்ஜீல் இமாம் மீது தேச துரோகம் (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 ஏ), பகைமையை ஊக்குவித்தல் (இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல்செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஒரு துணை குற்றப்பத்திரிகை கடந்த 18ஆம் தேதி எம்.எம். சாகேத் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தினால் அஸ்ஸாமை தனிநாடாக அறிவிப்பதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்ற தொனியில் பேசியதாக பரவிய அவரது முந்தைய உரைகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து தற்போது இமாம் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது உபா சட்டம் பாய்ந்தது!

கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா பகுதியில், மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாதுகாப்புப் படையினர் நுழைந்த பின்னர் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :ஜாமியா சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் : துணைக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது!

ABOUT THE AUTHOR

...view details