ஜனநாயக படுகொலை? மெஹ்பூபா முப்திக்கு தொடரும் வீட்டுக் காவல்! - மெஹ்பூபா முப்திக்கு தொடரும் வீட்டுக் காவல்
![ஜனநாயக படுகொலை? மெஹ்பூபா முப்திக்கு தொடரும் வீட்டுக் காவல்! mufti](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6695568-thumbnail-3x2-mufti.jpg)
12:53 April 07
ஸ்ரீநகர்: மெஹ்பூபா முப்தி தன் சொந்த வீட்டிற்கு மாற்றப்படவுள்ள நிலையில், அவரின் வீட்டுக் காவல் உத்தரவு தொடர்கிறது.
காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவல் அடைக்கப்பட்டனர். ஏழு மாத வீட்டுக் காவலுக்குப் பிறகு முன்னாள் முதலமைச்சர்கள் ஃபருக் அப்துல்லா, உமர் அப்துல்லா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
ஸ்ரீநகர் எம்.ஏ., சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெஹ்பூபா முப்தி, தனது சொந்த வீட்டிற்கு மாற்றப்படவுள்ளார். இருப்பினும் அவரின் வீட்டுக் காவல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரின் மகள் இல்திஜா முப்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் "காஷ்மீரில் உள்ள ஊடக நண்பர்களுக்கு நன்றி. முப்தி வீட்டிற்கு வரவுள்ள நிலையில், எங்கள் தனிமையைக் காக்க நீங்கள் உதவுவீர்கள் என நம்புகிறேன். அவர் விடுதலை செய்யப்படவில்லை என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். வீட்டுக் காவல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.