ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிறப்பு அந்தஸ்தை இழந்து, இரு யூனியன் பிரேதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி ஜம்மு-காஷ்மீரின் தனிக் கொடி அந்தஸ்தும் நீக்கப்பட்டது. அந்த கொடியில் ஒரு கலப்பையும், மூன்று கோடுகளும் இருக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர் கொடியை அகற்றிய முன்னாள் முதலமைச்சர் - flag
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் நிர்மல் சிங் தனது வாகனத்தில் பொருத்தியிருந்த அம்மாநில கொடியை அகற்றிவிட்டு தேசியக் கொடியை பொருத்தியுள்ளார்.
காஷ்மீரில் 1931ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் ஒன்றில் ரத்தக் கலவரம் ஏற்பட்டது. அதன் நினைவாக ஜம்மு-காஷ்மீர் கொடி சிவப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டது. மேலும், ஜம்மு-காஷ்மீர் கொடியில் உள்ள மூன்று கோடுகள் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய மூன்று பகுதிகளையும், கலப்பை குறியீடு விவசாயிகளையும் குறிப்பிடுகிறது.
தற்போது, மத்திய அரசு 370 சட்டப் பிரிவில் திருத்தங்கள் செய்திருப்பதால், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் நிர்மல் சிங் தனது வாகனத்தில் பொருத்தியிருந்த அம்மாநில கொடியை அகற்றிவிட்டு இந்திய மூவர்ண தேசியக் கொடியை பொருத்தியுள்ளார்.