டெல்லியின் முதலமைச்சராக 1998ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்த ஷீலா தீட்சித் இன்று காலமானார். அவருக்கு வயது 81. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை ஷீலா தீட்சித் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிர் பிரிந்தது.
டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்! - டெல்லி முதலமைச்சர்
டெல்லி: டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் இன்று காலமானார். அவரது மறைவையொட்டி அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவில் பிறந்த ஷீலா தீட்சித் ராஜீவ்காந்தி அமைச்சரவையில், மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர். டெல்லி காங்கிரஸ் தலைவராக நெடுங்காலமாக இருந்த இவர், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். நேரு குடும்பத்திற்கு நெருக்கமாக பார்க்கப்பட்ட இவரை, 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்தது. இவர் சிறிது காலம் கேரள ஆளுநராக பொறுப்பு வகித்தார்.
அண்மையில் நடந்த மக்களவை தேர்தலில் டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டு ஷீலா தீட்சித் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.