தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சத்தீஸ்கரின் முன்னாள் முதலமைச்சர் மகன் மோசடி வழக்கில் கைது! - பிரமாண பத்திரத்தில் மோசடி

பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரின் மகன் அமித் ஜோகி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமித் ஜோகி

By

Published : Sep 3, 2019, 3:15 PM IST

Updated : Sep 3, 2019, 4:02 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகியின் மகனும் அம்மாநிலத்தின் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியின் தலைவருமான அமித் ஜோகி இன்று ஏமாற்றுதல், மோசடி வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமித் ஜோகி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பிறந்த வருடத்தை மாற்றி கொடுத்தாக, அவர் மீது அம்மாநில பாஜக பிரமுகர் சமீரா பைக்ரா (Sameera Paikra) மோசடி வழக்கை கடந்த பிப்ரவரி மாதம் பிலாஸ்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கு குறித்து காவல் துறையினர் விசாரித்து வந்தநிலையில், இன்று அவரை கைது செய்துள்ளனர். இந்த கைது நடிவடிக்கையானது முழுக்க முழுக்க பழிவாங்கும் செயலாகும் என்று முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி தெரிவித்துள்ளார்.

Last Updated : Sep 3, 2019, 4:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details