சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராய்ப்பூரிலுள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகிக்கு மாரடைப்பு! - அஜித் ஜோகி கவலைக்கிடம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் ஜோகி மாரடைப்பு காரணமாக ராய்ப்பூரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அஜித் ஜோகிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடப்பதாகவும், அவரது உடல் நிலை மோசமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், “74 வயதான அஜித் ஜோகியின் சுவாசம் ஒழுங்கற்று காணப்படுகிறது. அவருக்கு வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர்” என கூறப்பட்டுள்ளது.
அவரது மகன் அமித் ஜோகி, தனது தந்தையான அஜித் ஜோகிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக கூறியுள்ளார். காங்கிரஸ் உறுப்பினரான அஜித் ஜோகி, கடந்த 2000ஆவது ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.