மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியில் முதலமைச்சராக பதவி வகித்தவர் புத்ததேப் பட்டாச்சார்ஜி (வயது 76) . வயது மூப்பு காரணமாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த அவர் கடந்த சில ஆண்டுகளாக தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு டிச.9 ஆம் தேதி கொல்கத்தாவிலுள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரலில் கடுமையான பாதிப்பை கண்டிருந்த அவருக்கு வென்ட்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சரி செய்வதற்காக அவருக்கு மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து ஆபத்தான நிலையிலேயே இருப்பதாக தனியார் மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மோசமடைந்துவரும் மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சரின் உடல்நிலை! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புத்ததேப் பட்டாச்சார்ஜியை நேரில் சென்று அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (டிச.10) நேரில் சென்று நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :கேரள தேர்தல் பணியில் களமிறங்கிய ரோபோட்!