குஜராத் மாநிலத்தில் தசரா பண்டிகை வெகு சிறப்பாகவும் கோலகலமாகவும் கொண்டாடப்படும். இந்த பண்டிகையின் ஒரு பகுதியாக கர்பா நிகழ்ச்சி கொண்டாடுவர். இதில் வண்ணமயமான உடைகள் அணிந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் நடனமாடுவர்.
இந்நிலையில் குஜராத்தில் நடைபெற்ற கர்பா நிகழ்ச்சியில் பெண்கள் மூன்று பேர் பாம்பை வைத்து நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து மூன்று பெண்கள் உள்பட ஐந்து பேர் மீது வனத்துறை துணை பாதுகாவலர் சுனில் பெர்வால் காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அவரது புகாரையடுத்து நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தவர், பாம்பை பிடித்துக் கொடுத்தவர், மூன்று பெண்கள் ஆகிய ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.