தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள், அரியவகை உயிரினம் கடத்தல்! - red sandalwood smuggling

சித்தூர்: ஆந்திர வனப்பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும், அரிய வகை உயிரினத்தையும் கடத்துவதற்காக வைத்திருந்தபோது, கடத்தல் காரர்களை வனத் துறையினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

red sandalwood smuggling
red sandalwood smuggling

By

Published : Dec 14, 2019, 3:15 PM IST

ஆந்திர வனத் துறையினர் பல வழிகளில் செம்மரக் கட்டை கடத்தலைத் தடுக்க வனத் துறையினர் பாடுபட்டு வருகின்றனர். இச்சுழலில் சித்தூர் வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் நடைபெறுவதாக வனத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. மேலும், 28 கடத்தல்காரர்கள் தலகோனா வனப்பகுதியில் புலிகுண்ட்லா எனும் இடத்தில் பதுங்கியிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்; 6 பேர் கைது!

இத்தகவலைக் கொண்டு வனத் துறையினர் தேடுதல் வேட்டையை நடத்தினர். இதில் நால்வரைக் கைது செய்துள்ள வனக் காவலர்கள், அவர்கள் கடத்த இருந்த, வெட்டப்பட்ட செம்மரக் கட்டைகளைத் தேடியுள்ளனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் அதனை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்கார்பியோ காரில் செம்மரம் வெட்டச் சென்ற ஏழு பேர் கைது!

இதில் 26 செம்மரக் கட்டைகளும், ஒரு அரிய வகை உயிரினமும் வனத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பகாராபேட்ஸ் தலைமை வன அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மேலும், பதுங்கியிருக்கும் கடத்தல் காரர்களை வனத் துறையினர் தேடி வருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details