தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மம்தாவின் கோட்டையில் மற்றொரு விக்கெட் காலி! - அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த லக்ஷ்மி ரத்தன் சுக்லா

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான லக்ஷ்மி ரத்தன் சுக்லா, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

லக்ஷ்மி ரத்தன் சுக்லா
லக்ஷ்மி ரத்தன் சுக்லா

By

Published : Jan 5, 2021, 4:55 PM IST

அடுத்தாண்டு மே மாதம், மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பாஜகவில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான லக்ஷ்மி ரத்தன் சுக்லா, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வங்க ரஞ்சி அணியின் முன்னாள் கேப்டனான சுக்லா, ஹவுரா (உத்தர்) தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் உள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் மம்தாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், அரசியலிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மம்தா இதுகுறித்து கூறுகையில், "சுக்லாவின் ராஜினாமா கடிதத்தை இன்று பெற்றுக் கொண்டேன். அவர் ஒரு சிறப்பான மனிதர், விளையாட்டுக்கு திரும்ப விரும்புகிறார். இதில், கருத்து வேற்றுமை எதுவுமில்லை. தேர்தல் நடைபெறும் வரை, அவர் சட்டப்பேரவை உறுப்பினராக தொடர்வார். அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளும்படி ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளேன்" என்றார்.

வரும் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பாஜக பெரும் சவால் விடுக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுவேந்தி அதிகாரி அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். தேர்தலுக்கு பிறகு மம்தா அரசியல் அநாதையாகிவிடுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்திருந்தார்.

சுவேந்தி அதிகாரியின் தம்பியும் கவுன்சிலருமான சவுமேந்து அதிகாரியும் பாஜகவில் இணைந்துள்ளார். கடந்த வாரம் மட்டும், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details