கடந்த ஐந்தாண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவானது என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்து பேசிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளீதரன், கடந்த ஐந்தாண்டுகளில் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு மட்டும் ரூ. 446.52 கோடி செலவானதாகத் தெரிவித்துள்ளார்.
முரளீதரன் அளித்த தகவலின்படி, 2015-16ஆம் ஆண்டில் ரூ.121.85 கோடியும் 2016-17ஆம் ஆண்டிற்கு ரூ.78.52 கோடியும் 2017-18ஆம் ஆண்டிற்கு ரூ.99.90 கோடியும் 2018-19ஆம் ஆண்டில் ரூ.100.2 கோடியும் 2019-20ஆம் ஆண்டிற்கு ரூ.46.23 கோடியும் செலவாகியுள்ளது தெரியவந்துள்ளது.