காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், பிகார் சட்டப்பேரவையின் மேல்சபை உறுப்பினருமான பிரேம் சந்திர மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மாநிலத்தில் கரோனா தீ நுண்மி (வைரஸ்) பாதிப்பு குறித்து முதலமைச்சர் நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. நெருக்கடியான இந்த நேரத்தில், அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஜே.டி.யு (ஒருங்கிணைந்த ஜனதா தளம்) கட்சி உறுப்பினராகப் பணியாற்றாமல், முதலமைச்சராகப் பணியாற்ற நான் அவருக்கு அறிவுறுத்துகிறேன்.
இதில் ராஜதர்மத்தை கடைபிடியுங்கள். எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இதுகுறித்து பேசாதவரை, இந்த விஷயத்தைப் பற்றி தெளிவான விளக்கப்படத்தை அவரால் பெற முடியாது. மொத்தம் 106 எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சியில் உள்ளனர்.
நாங்களும் பலமாக உள்ளோம். எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களின் கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும். இதனை நான் உறுதியாக அறிவுறுத்துகிறேன்.